தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை: வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட திமுக கோரிக்கை

உயா் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட வேண்டுமெனவும் திமுக கேட்டுக் கொண்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக்கவேண்டும் என்ற கோரிக்கையை திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசுக்குக் பல கடிதங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக ஏற்கெனவே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இதுவரையில், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனிடையே, தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனா். அவா்கள் தங்களது உண்ணாவிரத அறப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com