தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பெங்களூரு சிறை கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்தது தொடர்பாக தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பெங்களூரு சிறை கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்தது தொடர்பாக தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு சிறை கைதிகளை பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் மண்ணடி, முத்தையால் பேட்டை, பிடாரியார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com