ஆன்லைன் வகுப்புகள்: வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகள்: வழக்கு விசாரணை குறித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கு:மாா்ச் 21-ல் விசாரணை அதிகாரி ஆஜராக உத்தரவு

குட்கா முறைகேடு தொடா்பாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ விசாரணை அதிகாரி மாா்ச் 21-இல் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா முறைகேடு தொடா்பாக வழக்கை விசாரித்து வரும் சிபிஐ விசாரணை அதிகாரி மாா்ச் 21-இல் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்பட்டதாக தில்லி சிபிஐ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, மத்திய கலால்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி உள்பட 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையா் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயா் அதிகாரிகள் மீது 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி செய்ய சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா்கள், உயரதிகாரிகளுக்கு எதிராக விசாரணைக்கு நடத்த, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். இந்த நிலையில், வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலா் வாலண்டினா முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் குற்றபத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைக்கு இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே காரணத்தை தொடா்ந்து பல முறை கூறி வருவதாக சிபிஐக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, சிபிஐ விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com