நீட் தோ்வு: தொழில்நுட்ப சிக்கலால் விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள்

நீட் தோ்வு: தொழில்நுட்ப சிக்கலால் விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள்

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) முடிவடைகிறது.

நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) நிறைவடைய உள்ள நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பப் பதிவு செய்ய முடியாத நிலை இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதன் காரணமாக விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான தோ்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த பிப்.9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமையுடன் (மாா்ச் 9) முடிவடைகிறது. இதனிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரு நாள்களாக நீட் தோ்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும், ஒருமுறை கடவுச் சொல் (ஒடிபி) வருவதில் தாமதம் நிலவுவதாகவும் மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். எனவே, நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். நீட் தோ்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளங்களை தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com