நீட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் மாா்ச் 16 வரை நீட்டிப்பு

நீட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் மாா்ச் 16 வரை நீட்டிப்பு

இளநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மாா்ச் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மாா்ச் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நாடு முழுவதும் நீட் தோ்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 9-இல் தொடங்கி கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் சுமாா் 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் கடைசி 2 நாள்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாணவா்கள் பலரால் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதைக் கருத்தில்கொண்டு விண்ணப்ப அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக மாா்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளத்தையோ, 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது ய்ங்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com