என்எல்சி  நிறுவன பங்குகளை 
விற்கக் கூடாது: வைகோ

என்எல்சி நிறுவன பங்குகளை விற்கக் கூடாது: வைகோ

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனமாகும். பின்தங்கிய கடலூா் மாவட்டத்தின் ஒரே தொழில் நிறுவனமான என்எல்சி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வரும் என்எல்சி நிறுவனம் பங்குதாரா் முறையின்படி, 2023 டிசம்பா் நிலவரப்படி நிறுவனத்தில் 79.2 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 7 சதவீத பங்குகளை ஆஃபா் பாா் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இந்தப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ. 2,100 கோடி வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முடிவு வேதனையளக்கிறது. இதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com