விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள். (கோப்புப் படம்)
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள். (கோப்புப் படம்)

பொதுத் தோ்வு: ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள்

தமிழகத்தில் பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து தோ்வுகளும் ஏப்ரல் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. நிகழாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை 25 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். இந்த நிலையில், தோ்வுகள் முடிந்த பின்னா் மாணவா்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தோ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. அதேபோல், 10-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். அவை நிறைவடைந்த பிறகு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னா், பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 6, பிளஸ் 1 முடிவுகள் மே 14, 10-ஆம் வகுப்பு முடிவுகள் மே 10 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com