கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளாா்.

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது தொடா்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளாா். மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றுள்ளதுடன், அதன் தலைவா் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளாா். மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் திமுகவால் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளை எதிா்த்து, மநீமவைத் தொடங்கியவா் கமல்ஹாசன். தற்போது அவா் திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பது விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பது:

இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிா்வாத சக்திகளுக்குக் கைகூடிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். தேச நலனுக்காக சிறு சிறு வேறுபாடுகளை நாம் கைவிட வேண்டும். தேசத்துக்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com