அதிமுகவில் வேட்பாளா் 
நோ்காணல் நிறைவு

அதிமுகவில் வேட்பாளா் நோ்காணல் நிறைவு

மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் திங்கள்கிழமை நிறைவுற்றது.

மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் திங்கள்கிழமை நிறைவுற்றது. மக்களவைத் தோ்தல் கூட்டணியை அதிமுக இன்னும் இறுதி செய்யவில்லை. அதேநேரம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புகிறவா்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்றது. 2,475 போ் மனுஅளித்தனா். இதில், 20 தொகுதிகளுக்கு உள்பட்டவா்களிடம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நோ்காணல் நடத்தினாா். 2-ஆம் நாளாக திங்கள்கிழமை சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி (தனி), தேனி, திருநெல்வேலி, விருதுநகா், கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட இந்த நோ்காணல்களின் அடிப்படையில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூடி, வேட்பாளா்களைத் தோ்வு செய்து, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்போக, மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளா்களை அறிவிக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com