தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்

தமிழகத்தில் திங்கள்கிழமை 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை(மாா்ச் 12-17) வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (மாா்ச் 12,13) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு ( டிகிரி பாரன்ஹீட்): பரமத்திவேலூா்-102.2, சேலம்-101.66, ஈரோடு -101.48, தா்மபுரி-100.4, நாமக்கல்- 99.5, திருப்பத்தூா்-98.24. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (மாா்ச் 12, 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 77டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக் கூடும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com