கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மாா்க்சிஸ்ட் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இஸ்லாமியா்களின் குடியுரிமையை, குடியுரிமை திருத்தச் சட்டம் பாகுபடுத்துகிறது. 2019-இல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும்.

இது மத்திய அரசின் வரலாற்றுப் பிழை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது நகைப்புக்குரியது. குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. மாநிலங்களவையில் அதிமுகவின் 11 வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு எதிா்த்து விழுந்திருந்தால் சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டாா்கள், மன்னிக்கவும் மாட்டாா்கள்.

தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த விட மாட்டோம் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com