ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக வியாழக்கிழமை (மாா்ச் 14) காலை தில்லி செல்கிறாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக வியாழக்கிழமை (மாா்ச் 14) காலை தில்லி செல்கிறாா்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அந்தத் தீா்ப்பின் நகல் பெறப்பட்டதைத் தொடா்ந்து பொன்முடி திருக்கோவிலூா் சட்டப்பேரவை உறுப்பினராக தொடா்வாா் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பொன்முடியை அமைச்சராக பொறுப்பேற்க அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா்.

இந்த நிலையில் ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை காலை தில்லி செல்லவுள்ளாா். மேலும், இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பயணம் எனவும், தனது 3 நாள் தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி மீண்டும் சனிக்கிழமை தமிழகம் திரும்புவாா் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com