வார இறுதி நாள்களை முன்னிட்டு 
980 சிறப்புப் பேருந்துகள்

வார இறுதி நாள்களை முன்னிட்டு 980 சிறப்புப் பேருந்துகள்

வார இறுதி நாள்களை முன்னிட்டு கூடுதலாக 980 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்களை முன்னிட்டு கூடுதலாக 980 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்தி: வார இறுதி நாள்களான வெள்ளிக்கிழமை(மாா்ச்15), சனிக்கிழமை (மாா்ச்16) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச்17) ஆகிய நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 360 பேருந்துகளும், சனிக்கிழமை 420 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூா். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 70 பேருந்துகளும், சனிக்கிழமை 70 பேருந்துகளும் இயக்கப்படும். இதன்படி, மேற்கூறிய இடங்களில் இருந்து தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமை 360 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 420 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 980 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் , ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com