பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 138 பாடப்புத்தகங்கள்

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 138  பாடப்புத்தகங்கள்

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 138 தமிழ் பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று (15.03.2024) முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரையிலான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

இப்புத்தகங்களை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலட்சுமி, மற்றும் இணை இயக்குநர் சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com