திமுக-காங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும்: மோடி

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி உரை
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி உரை

திமுக-காங்கிரஸ் செய்த தவறு மற்றும் பாவக் கணக்கிற்குப் கணக்கு கூற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசுகையில், ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளத. தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்ணி முற்றிலும் அகற்றப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து கிளம்புயிள்ள அலை நீண்ட தூரம் பயணிக்கும். பெண்களுக்கு பாஜக தான் தனி மதிப்பு கொடுக்கும் கட்சி. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், திமுக - காங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும்.

இலங்கை கடற்பகுதியில் திமுக-காங்கிரஸ் செய்த தவறுக்கு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com