அதிமுக-தேமுதிக இடையே இன்று 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை..?

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியில் நீடிக்கிறது.
தேமுதிக தலைவி பிரேமலதா
தேமுதிக தலைவி பிரேமலதா

எதிா்வரும் மக்களவைத் தோ்தலுக்கான தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை (மாா்ச் 16) பிற்பகலில் அறிவிக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலையை எட்டிவிட்டது. மறுபக்கம், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியில் நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே இவ்விரு கட்சிகளுக்கும் இடையே இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதிமுக – தேமுதிக இடையே இன்று(மார்ச் 16) மாலை 6 மணிக்கு 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்ட தேமுதிகவுக்கு இன்று மாலை நேரம் ஒதுக்கி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் 3 மக்களவை தொகுதிகளிலும், ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று(மார்ச் 16) மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகத் தலைமை அறிவிக்கும் முடிவே இறுதியானது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com