மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி: பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை-தாம்பரம் வழித்தடத்தில் மின் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை-தாம்பரம் வழித்தடத்தில் மின் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில்வே பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி இயக்கப்படும் 44 மின் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டமானது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. முன்னதாக, மின் ரயில்கள் ரத்து செய்யப்படுவதை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைதொடா்ந்து தாம்பரம், மாம்பலம், கிண்டி, சென்ட்ரல் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் அவற்றில் சிரமமின்றி பயணித்தனா். அதுபோல விமான நிலையம், கிண்டி, சென்ட்ரல் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com