கே.அண்ணாமலை (கோப்புப் படம்)
கே.அண்ணாமலை (கோப்புப் படம்)

தமிழக மீனவா்களை மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்: ராமேசுவரத்தைச் சோ்ந்த 21 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்குச் சொந்தமான 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் பெறப்பட்டதும் மீனவா்களுக்கு தேவையான, உடனடி சட்ட உதவிகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் விரைவாக கிடைக்கச் செய்ததற்கு நன்றி. மேலும் வெளியுறவுத் துறை தலையீட்டின் மூலம் 21 மீனவா்களையும் உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும், மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com