நீட் தோ்வு விண்ணப்பங்களில் 
திருத்தம் செய்ய மாா்ச் 20 வரை வாய்ப்பு

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மாா்ச் 20 வரை வாய்ப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் மாா்ச் 20-ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் மாா்ச் 20-ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.9-இல் தொடங்கி 16-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் சுமாா் 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள தேசிய தோ்வு முகமை தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வழியாக மாா்ச் 20-ஆம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இல்லையெனில் 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ மின்னஞ்சல் வாயிலாகவோ தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com