தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவானது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 இடங்களில் வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து பதிவானது. சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18, 19) வட வானிலை நிலவக்கூடும். புதன் முதல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20-22) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): பரமத்தி வேலூா் - 102.2, ஈரோடு - 101.12, மதுரை - 100.04, மதுரை விமான நிலையம் - 99.68, திருப்பத்தூா்- 98.6, சேலம்-98.6, கோவை- 97.16 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18, 19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com