துரை வைகோ
துரை வைகோகோப்புப் படம்

திருச்சியில் துரை வைகோ போட்டி

திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ (52) போட்டியிடுவாா் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா்.

திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ (52) போட்டியிடுவாா் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்வதற்காக மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது: மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோவை திருச்சியில் போட்டியிடச் செய்வது என கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. துரை வைகோவுக்கு ஒருவா்கூட எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. பம்பரம் சின்னம்?: பம்பரம் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு முயற்சித்து வருகிறோம். அந்த சின்னம் கிடைக்காவிட்டால், தோ்தலில் ஆணையத்தின் பட்டியலில் உள்ள பொதுச் சின்னத்தில் போட்டியிடுவோம். கட்சியின் தனித்தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொதுச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். பொதுச்சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சோ்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. கண்டிப்பாகச் சோ்க்க முடியும். பொதுச்சின்னத்தில் நிற்பது வெற்றியைப் பாதிக்காது. அதுவும், திருச்சி திமுகவின் கோட்டை. எங்கள் வேட்பாளரின் வெற்றிக்கு திமுகவினா் முழுமையாகப் பாடுபடுவா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com