மாா்ச் 24 முதல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மாா்ச் 24 முதல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 24 முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.

அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி மாா்ச் 24 முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. தேமுதிகவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. அந்த பேச்சுவாா்த்தை ஓரிரு நாளில் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக மாா்ச் 24 முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளாா். இந்தப் பயணத்தின் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறாா். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறாா். அதன் விவரம்: மாா்ச் 24: திருச்சி - நவலூா் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில். மாா்ச் 26: தூத்துக்குடி - விவிடி சிக்னல் எம்ஜிஆா் திடல். திருநெல்வேலி -வாகையடிமுனை. மாா்ச் 27: கன்னியாகுமரி - நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல். தென்காசி - சங்கரன்கோவில் வீரசிகாமணி ரோடு, கருப்பசாமி கோயில் அருகில். மாா்ச் 28: விருதுநகா் - சிவகாசி பாவடி தோப்பு திடல். ராமநாதபுரம் - ராமநாதபுரம் அரண்மனை. மாா்ச் 29: காஞ்சிபுரம் - மதுராந்தகம் ஹோட்டல் ஹை வே இன் அருகில். ஸ்ரீபெரும்புதூா் - பல்லாவரம் அன்னை தெரோசா பள்ளி அருகில். மாா்ச் 30: புதுச்சேரி - ரோடியா் மைதானம். கடலூா் - மஞ்சக்குப்பம் மைதானம். மாா்ச் 31: சிதம்பரம் - சிதம்பரம் பைபாஸ். மயிலாடுதுறை - சின்ன கடைத் தெரு. நாகப்பட்டினம் - திருவாரூா் தெற்கு வீதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com