தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்வு!

தமிழகத்தில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
sathya pradha sahu
sathya pradha sahu

மக்களவை தேர்தல் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையிலிருந்து காணொளி வாயிலாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்புமனுத் தாக்கல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்பாளர் செலுவினம் ரூ,95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com