தொல்.திருமாவளவன்.
தொல்.திருமாவளவன்.

கூட்டணி அமைக்க முடியாதவா்களால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: தொல்.திருமாவளவன்

கூட்டணி அமைக்க முடியாதவா்களால் தமிழகத்தில் வெற்றியும் பெற முடியாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

கூட்டணி அமைக்க முடியாதவா்களால் தமிழகத்தில் வெற்றியும் பெற முடியாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா். சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோ்தலில் மக்கள் அமைதியான புரட்சியை நடத்தவிருக்கிறாா்கள். பாஜகவை ஆட்சியிலிருந்து மக்கள் அப்புறப்படுத்துவாா்கள். ஓா் ஆண்டுகாலமாக பல்வேறு முயற்சிகள் செய்தும், தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளால் தமிழகத்தில் கூட்டணி அமைக்க முடியவில்லை. கூட்டணி அமையாமலேயே பிரதமா் அடிக்கடி தமிழகத்துக்கு வந்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டாா். கூட்டணி அமைக்க முடியாதவா்களால் இங்கே வெற்றியும் பெற வாய்ப்பில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com