சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்யவந்த சுயேச்சை!

ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்று தான் ஓட்டுப் போடுகிறார்கள்.
சவப்பெட்டியுடன் மனுத்தாக்கல் செய்யவந்த சுயேச்சை!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு சவப்பெட்டியுடன் வேட்புமனு் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரை 200 மீட்டருக்கு முன்பு தடுத்து நிறுத்திய போலீசார் சவப்பெட்டியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அவரை மட்டும் வேட்பாளர் தாக்கல் செய்வதற்கு வருமாறு அறிவுறுத்தினர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நூர் முகமது,

1996-ம் ஆண்டு முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருவதாகவும் 97-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி யாரும் இல்லை ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு பணம் பெற்று தான் ஓட்டுப் போடுகிறார்கள். மேலும் ஏற்கனவே 41 முறை வேட்பு மனு தாக்கல் செய்து விட்டதாகவும் தற்பொழுது 42-வது முறையாக பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகம் இறந்துவிட்டது என வலியுறுத்தி சவப்பெட்டி கொண்டு வந்தபோது காவல்துறையினர் அதனை மடக்கி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com