திமுக வேட்பாளர்கள்: முழு விவரங்கள்!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்.
திமுக வேட்பாளர்கள்: முழு விவரங்கள்!

வடசென்னை

பெயர் : கலாநிதி வீராசாமி

பெற்றோர் : ஆற்காடு நா.வீராசாமி, கஸ்தூரி வீராசாமி

பிறந்த தேதி : 25.04.1969 (54)

படிப்பு : எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்., எம்சிஎச்.,

தொழில் : மருத்துவர்

முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி.

தென் சென்னை

பெயர் : த.சுமதி என்ற தமிழச்சி

தங்கபாண்டியன்

பெற்றோர் : வி.தங்கபாண்டியன், ஆர்.ராஜாமணி பாப்பாத்தி

பிறந்த தேதி : 25.04.1962 (61)

படிப்பு : எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.,

தொழில் : கவிஞர்

முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி

மத்திய சென்னை

பெயர் : தயாநிதி மாறன்

பெற்றோர் : முரசொலி மாறன், மல்லிகா மாறன்

பிறந்த தேதி : 05.12.1966 (57)

படிப்பு : பி.ஏ.,

முந்தைய தேர்தல்கள்: 2004, 2009, 2019- மக்களவைத் தேர்தலில் வெற்றி, 2014- தோல்வி

ஸ்ரீபெரும்புதூர்

பெயர் : டி.ஆர்.பாலு

பெற்றோர் : ராஜூ தேவர்-வடிவாம்பாள்

பிறந்த தேதி : 15.6.1941 (82)

படிப்பு : பி.எஸ்சி.

தொழில் : வர்த்தகம்

கட்சிப் பதவி : திமுக பொருளாளர்

முந்தைய தேர்தல்கள் : 1986-இல் மாநிலங்களவை உறுப்பினர்.

1996, 1998, 1999, 2004, 2009, 2019 தேர்தல்களில் மக்களவை உறுப்பினர். மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.

காஞ்சிபுரம் (தனி)

பெயர் : க.செல்வம்

பெற்றோர் : கணேசன், நாகம்மாள்

பிறந்த தேதி : 18.6.1974 (50)

படிப்பு : எம்.காம்., எம்.பில்., எல்எல்பி.

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

அரக்கோணம்

பெயர் : எஸ்.ஜெகத்ரட்சகன்

பெற்றோர் : ஜி.சாமிக்கண்ணு, லட்சுமி அம்மாள்

பிறந்த தேதி : 6.2.1948 (76)

படிப்பு : எம்ஏ., டி.லிட்.

தொழில் : மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஐந்து நட்சத்திர உணவகங்கள், தொழிற்சாலைகள்.

கட்சிப் பதவி: உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: 1980-84 உத்தரமேரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ, 1984-89 செங்கல்பட்டு எம்.பி. 1999- 2004, 2009-14, 2019-24 3 முறை அரக்கோணம் தொகுதி எம்.பி. 2009-12 தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்

வேலூர்

பெயர் : டி.எம்.கதிர்ஆனந்த்

பெற்றோர் : துரைமுருகன் (நீர்வளத் துறை அமைச்சர்), டி.சாந்தகுமாரி

பிறந்த தேதி : 19.1.1975 (49)

படிப்பு : பி.காம்., எம்பிஏ (சர்வதேச வர்த்தகம்)

தொழில் : வர்த்தகம், அரசியல்

கட்சிப் பதவி : திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலத் தலைவர்

முந்தைய தேர்தல்கள்: மக்களவைத் தேர்தல் 2019 வெற்றி

தருமபுரி

பெயர் : ஆ.மணி

தந்தை : ஆரிமுத்து

வயது : 55

படிப்பு : பி.காம், பி.எல்.,

தொழில் : வழக்குரைஞர்

கட்சிப் பதவி : தருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: 2019 பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி.

திருவண்ணாமலை

பெயர் : சி.என்.அண்ணாதுரை

பெற்றோர் : சி.நடராஜன், சரோஜா

பிறந்த தேதி : 21.6.1973 (51)

படிப்பு : பி.காம்.

தொழில் : விவசாயம், ரெடிமிக்ஸ் கான்கிரீட்

கட்சிப் பதவி : 2012 முதல் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்

முந்தைய தேர்தல்கள்: 2014- தோல்வி, 2019- வெற்றி.

ஆரணி

பெயர் : எம்.எஸ்.தரணிவேந்தன்

பெற்றோர் : சாமிநாதன், சரஸ்வதியம்மாள்

பிறந்த தேதி : 15.06.1965, (58)

படிப்பு : பத்தாம் வகுப்பு

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

கள்ளக்குறிச்சி

பெயர் : தே.மலையரசன்

பெற்றோர் : மொ.தேவராசு - தனகோடி

பிறந்த தேதி : 30.5.1975 (49)

படிப்பு : எம்.காம்., கூட்டுறவு மேலாண்மையில் பட்டயப் படிப்பு.

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : தியாகதுருகம் பேரூர் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

சேலம்

பெயர் : டி.எம்.செல்வகணபதி

பெற்றோர் : டி.எம்.முத்துசாமி -அழகம்மாள்

பிறந்த தேதி : 1959 (65)

படிப்பு : எம்.ஏ., எல்எல்பி.

கட்சிப் பதவி : சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்.

முந்தைய தேர்தல்கள்: 1991பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டுவெற்றி; 1999 சேலம் தொகுதியில் வெற்றி.

ஈரோடு

பெயர் : கே.இ.பிரகாஷ்

பெற்றோர் : ஈஸ்வரமூர்த்தி, சுப்புலட்சுமி

பிறந்த தேதி : 20-5-1976 (48)

படிப்பு : இளநிலை பொருளாதாரம்

தொழில் : டைல்ஸ் விற்பனை, விவசாயம்

கட்சிப் பதவி : திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை

நீலகிரி (தனி)

பெயர் : ஆ.ராசா

பெற்றோர் : எஸ்.கே.ஆண்டிமுத்து - கிருஷ்ணம்மாள்

பிறந்த தேதி : 23.5.1963 (60)

படிப்பு : பி.எஸ்சி, பி.எல்., எம்.எல்.

தொழில் : வழக்குரைஞர்

கட்சிப் பதவி : திமுக துணைப் பொதுச் செயலர்

முந்தைய தேர்தல்கள்: 2014 - தோல்வி, 2019 - வெற்றி.

கோவை

பெயர் : கணபதி ப.ராஜ்குமார்

பெற்றோர் : பழனிசாமி - புவனேஸ்வரி

பிறந்த தேதி : 17.4.1965, (59)

படிப்பு : எம்.ஏ., எல்.எல்.பி., பிஎச்.டி.

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : திமுக கோவை மாநகர் மாவட்ட அவைத் தலைவர்

முந்தைய தேர்தல்கள்: 2014 கோவை மேயருக்கான இடைத்தேர்தலில் வெற்றி.

பொள்ளாச்சி

பெயர் : கே.ஈஸ்வரசாமி

பெற்றோர் : கருப்புசாமி - வேலாத்தாள்

பிறந்த தேதி : 20.4.1976 (47)

படிப்பு : பத்தாம் வகுப்பு

தொழில் : வர்த்தகம், நூற்பாலை

கட்சிப் பதவி : மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச் செயலர்

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

பெரம்பலூர்

பெயர் : கே.என். அருண் நேரு,

பெற்றோர் : கே.என். நேரு- சாந்தா.

பிறந்த தேதி : 12.12.1983 (40)

படிப்பு : ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்எஸ் பட்டம் தொழில் : விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம்.

கட்சிப் பதவி : திமுக அடிப்படை உறுப்பினர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

தஞ்சாவூர்

பெயர் : ச.முரசொலி

பெற்றோர் : கே. சண்முகசுந்தரம் - தர்மசம்வர்த்தினி

பிறந்த தேதி : 26.6.1978, (45)

படிப்பு : பி.எஸ்ஸி., பி.எல்.

தொழில் : வழக்குரைஞர்

கட்சிப் பதவி : தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: 2006-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி

தேனி

பெயர் : தங்க.தமிழ்ச்செல்வன்

பெற்றோர் : த.தங்கவேல்-சரஸ்வதி அம்மாள்

பிறந்த தேதி : 3.10.1961 (62)

படிப்பு : எம்.ஏ.

தொழில் : விவசாயம்

கட்சிப் பதவி : தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல்களில் தோல்வி

தூத்துக்குடி

பெயர் : கனிமொழி

பெற்றோர் : கருணாநிதி - ராஜாத்தி அம்மாள்

பிறந்த தேதி : 5.1.1968 (56)

படிப்பு : பி.ஏ., வணிகப் பொருளியல்

தொழில் : அரசியல்வாதி, கவிஞர், பத்திரிகையாளர்

கட்சிப் பதவி : திமுக துணைப் பொதுச் செயலர்.

முந்தைய தேர்தல்கள்: 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி

தென்காசி (தனி)

பெயர் : ராணிஸ்ரீகுமார்

பெற்றோர் : சிவக்குமார்- க.செல்வமணி

பிறந்த தேதி : 11.05.1983 (40)

படிப்பு : எம்.பி.பி.எஸ்., எம்.டி.

தொழில் : மயக்கவியல் மருத்துவர்,

கட்சிப் பதவி : திமுக உறுப்பினர்.

முந்தைய தேர்தல்கள்: போட்டியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com