பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் மறியல்!

அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள்  மறியல்!

ஏரியூர் அருகே சீலநாயக்கனூர் அரசு பள்ளிச் செல்லும் பழுதடைந்த சாலையை சரி செய்தும்,பள்ளியில் மாணவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக் கோரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியது.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சீலநாயக்கனூர் ஊர்நத்தம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

சீலநாயக்கனூர், ஊர் நத்தம், பேகியம் புதுக்காடு, தாளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஊர் நத்தம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதை மது பிரியர்கள் வாங்கி பள்ளிக்குச் செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து மாலை வேளையில் மது குடித்துவிட்டு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் உடைத்து வருகின்றனர்.

பள்ளியிலிருந்து சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் போதும் கேலிவதை, பகடிவதை செயல்களில் ஈடுபடும் மது குடிப்போரிடமிருந்து தவிர்த்து கடந்து செல்லும் போது உடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்களால் காயங்களுடனும், விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாணவர்கள்  மறியல்!
2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்கள் வழங்கி சுயேச்சை வேட்புமனு!

மேலும் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதுமான குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், சீலநாயக்கனூர் பிரதான சாலையிலிருந்து பள்ளிக்குச் செல்லக்கூடிய பழுதடைந்த சாலையினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் சீலநாயக்கனூர் - பென்னாகரம் செல்லும் சாலையில் அமர்ந்து பதாகைகள் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சி.வி. மாது, தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தங்கராஜ், ஏரியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்கள், சீலநாயக்கனூர் ஊர் நத்தம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அரசுப் பள்ளிக்கு செல்லக்கூடிய பழுதடைந்த சாலை சரி செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறுக்கு மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்டிருந்த மாணவ,மாணவிகள் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com