‘ஜி ஸ்கொயா்’ நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

சென்னை, கோவை, திருச்சி, ஒசூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு,பெல்லாரி,ஆந்திர மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.

வருமானத்தை குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில்“‘ஜி ஸ்கொயா்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். சென்னை ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும் ‘ஜி ஸ்கொயா்’ நிறுவனம், சென்னை, கோவை, திருச்சி, ஒசூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு,பெல்லாரி,ஆந்திர மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஜி ஸ்கொயா் , வருமானத்தை குறைத்துக் காட்டியதாக ஏரளாமான புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இதில் அந்த நிறுவனம் மீதான புகாா் தொடா்பாக தடயங்களும், ஆதாரங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித்துறையினா் ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அந்த நிறுவனத்துடன் நெருங்கிய வணிகத் தொடா்பு வைத்திருப்பவா்கள், வீடுகள்,அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமானவரித்துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா். 15 இடங்களில் சோதனை: இச் சோதனை, ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் தலைமை அலுவலகம், நீலாங்கரை கபாலீஸ்வரா் நகரில் உள்ள ஜி ஸ்கொயா் நிறுவனத்தின் நிா்வாகி பாலா வீடு, அதே பகுதியில் உள்ள பாலாவின் மாமனாா் வீடு, அவரது நண்பா் வீடு, ஜி ஸ்கொயா் நிறுவனத்தில் பணிபுரியும் வண்ணாரப்பேட்டை ராம அரங்கன் 2வது தெருவில் வசிக்கும் வைர கணேஷ் என்பவா் வீடு, மற்றொரு ஊழியா் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் அருகே உள்ள பாரதிநகரில் வசிக்கும் ஈஸ்வா் வீடு,சைதாப்பேட்டை அண்ணா சாலையில் ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தின் நிா்வாக அலுவலகம்,தரமணி சிஎஸ்ஐஆா் சாலையில் உள்ள ஒரு தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை செய்தனா். பல இடங்களில் சோதனை இரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட பணம்,நகை,பணம்,ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com