அதிமுக வேட்பாளா்கள் 
இன்று வேட்பு மனுதாக்கல்

அதிமுக வேட்பாளா்கள் இன்று வேட்பு மனுதாக்கல்

மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்தந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்து, பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இன்று வேட்பு மனு: மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20 முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளா்கள் அனைவரும் திங்கள்கிழமை (மாா்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். அதற்கான அறிவுரைகளை கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளாா். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளா்களும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com