செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.

செங்கல்பட்டு ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

செங்கல்பட்டு அருகே சின்ன மேல மையூர் பகுதியில், ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு அருகே சின்ன மேல மையூர் பகுதியில், ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன முத்து மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலுக்கு ராஜகோபுரம், விமானம், கோபுரம் இன்றி வட்டக்கோயிலாக, கருவறையில் அம்பாள் வீற்றிலிருந்து, நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் தாயாகவும், அம்மை உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் மருத்துவச்சி அம்மனாகவும், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என சர்வ சக்தி சொரூபமாகயாகவும் விளங்குகிறார்.

பழமை வாய்ந்த இக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பரம்பரை பரம்பரையாக அறங்காவலர்களாக நிர்வகித்து வரும் முதலியார் சமூகத்தினர் பாலாலயம் செய்து தரைமட்டமாக்கி கடந்த 10 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டு, கரு கற்களாலேயே ராஜகோபுரம், கருவறை மற்றும் தனித்தனி சன்னதிகளும், மன்னர் கால கோயிலை போல் கருங்கற்களால் கட்டப்பட்டு, அம்மன், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சிற்பங்களும் கருங்கற்களால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்தனர்.

கும்பாபிஷேகத்தை ஒட்டி (மார்ச் 20) புதன்கிழமை, விக்ரகங்கள், உற்சவர்கள், கலசங்கள், மர வாகனங்கள் அனைத்து வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் கரிக்கோலம் ஊர்வலம் மற்றும் மூலவர் அம்மன் உள்ளிட்ட சிலைகள் அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 64 அடி உயர ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் பிரம்மாண்ட கருங்கல்லாலும், பழமை மாறாமல் புதிய கருங்களால் ஆன 12 அடி உயர மூன்று நிலை விமான கோபுரங்களோடு, பரிவார தெய்வங்கள் ஆகிய ஸ்ரீ குபேர விநாயகர், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பால் முனிஸ்வரர், ஸ்ரீ நவகிரகம் பரிவார ஸ்ரீ ராகு கேது விநாயகர், சஞ்சீவி ஆஞ்சநேயர், 12 அடி உயரம் உள்ள ஏழு தலை கருங்கல் நாகத்தில் கீழ் சப்த கன்னிமார்கள் மற்றும் கோஷங்களுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த புதன்கிழமையிலிருந்து விக்னேஷ்வர பூஜை, சோடச மகா கணபதி ஹோமம், சின்ன முத்து மாரியம்மன் விக்ரகம் மற்றும் நூதன பரிவார மூர்த்திகள் கரிகோலம், நூதன விநாயகர், சின்ன முத்து மாரியம்மன் விக்ரஹங்கள் மந்திரஸ்பிதாபிதம் செய்யப்பட்டு கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை, ஷோடஸ மகாலட்சுமி ஹோமம், தீர்த்த சங்கிகிரணம், பூர்ணாஹுதி ஆராதனை, இதனைத் தொடர்ந்து மாலை, பிரவேச பலி, அங்கூரா ர்ப்பணம், வெள்ளிக்கிழமை, நவகிரக ஹோமம், சாந்தி ஹோமம், ஆச்சாரிய ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையும் நடைபெற்றன.

சனிக்கிழமை இரண்டாம் கால பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை காலை, நான்காம் கால பூஜைகள், மூலமந்திர ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் பூஜைகளுடன் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம், விமான கோபுரம், பரிவார கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர், சின்ன முத்து மாரியம்மன் முதலான அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம்,, மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஜயன், முன்னாள் அறங்காவலர் சி.வி.என். குமாரசாமி உள்ளிட்ட விழா குழுவினர், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், அமைச்சர் தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆன்மீக அன்பர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com