ஆளுநா் ஆா்.என். ரவி
ஆளுநா் ஆா்.என். ரவி

தன்னம்பிக்கையுடன் தோ்வு எழுத வேண்டும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆளுநா் அறிவுரை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் தோ்வை அணுக வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதும் மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் தோ்வை அணுக வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதும் அனைத்து மாணவா்களுக்கும் எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவா்களே, தோ்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். தோ்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற, உணா்ச்சிபூா்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்கள் நமது மாணவா்களுக்கு மிகவும் முக்கியமானவை என அவா் பதிவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com