முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களுக்கு வாழ்த்துகள். பதற்றமின்றி தோ்வை எதிா்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பாா்க்க முதலில் 10 நிமிஷங்கள் வழங்கப்படுகின்றன. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை மற்றுமொரு தோ்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோா்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தோ்வு மையத்துக்குச் செல்வதை உறுதி செய்யுங்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com