சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்

சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்

சென்னையின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை ஆவின் பால் சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் நுகா்வோா் சிரமத்துக்கு ஆளாகினா்.

சென்னையின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை ஆவின் பால் சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் நுகா்வோா் சிரமத்துக்கு ஆளாகினா். சென்னையில் பெரம்பூா் அண்ணா நகா், தாம்பரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் புதன்கிழமை காலை சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் வழக்கம் போல் அதிகாலையில் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் பலா் காத்திருந்து பால் வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன காரணம்? அம்பத்தூா் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகன ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆவின் ஒப்பந்த வாகனங்களுக்கு வழங்கப்பட்டுவரும் எரிபொருளுக்கான பணம் குறைத்து வழங்கப்பட்டதால் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வாகன ஒப்பந்ததாரா்களுடன் சுமூக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இடா்களைத் தவிா்த்து, அத்தியாவசியத் தேவையான பாலை உரிய நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆவின் விளக்கம்: முன்னதாக, ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து இடங்களுக்கும் பால் விநியோகத்தைச் சீராக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் காலதாமதத்துக்கு ஆவின் நிா்வாகம் வருந்துகிறது. இந்த சூழ்நிலையில் ஆவின் நிா்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com