சுகவனேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு முதல்வரின் மனைவி துர்கா தேவி வருகை புரிந்தார்.
சுகவனேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு!

சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை ஒட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பணத்தில் ஈடுபட்டு வருகிறார் அவரோடு அவரது மனைவியும் உடன் சென்று வருகிறார்

இந்த நிலையில், இன்று மாலை சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார். இதனையொட்டி நேற்று இரவு அவர் சேலம் வந்தார் அவருடன் அவரது மனைவியும் சேலம் வந்ததையடுத்து இன்று காலை சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு முதல்வரின் மனைவி துர்கா தேவி வருகை புரிந்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைப் பெற வேண்டும் என வேண்டுதல் வைத்து சிறப்புப் பிரார்த்தனை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர் உற்சவர் மற்றும் சொர்ணாம்பிகை தாயார் மற்றும் கோயில் பிரகாரத்தில் உள்ள இஷ்ட தெய்வங்களையும் அவர் தனித்தனியே வணங்கினார்

இதனை ஒட்டி காவல்துறையினர் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழக முதல்வரின் மனைவி கோவிலுக்கு வருகை தந்ததை ஒட்டி கோவில் வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com