தனியார் 'போதை மறுவாழ்வு' மையத்தில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

கோவையில் தனியார் 'போதை மறுவாழ்வு ' மையத்தில் இளைஞர் ஒருவரின் வாயில் துணியை வைத்து இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
தனியார் 'போதை மறுவாழ்வு' மையத்தில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

கோவை: கோவையில் தனியார் 'போதை மறுவாழ்வு ' மையத்தில் இளைஞர் ஒருவரின் வாயில் துணியை வைத்து இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர் மாவட்டம், காந்திகிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் கிஷோர் (20). இவர் கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் போதைக்கு அடிமையானதை அடுத்து கோவில்பாளையம் அருகே கருவலூர் சாலையில் உள்ள தனியார் 'போதை மறுவாழ்வு' மையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கிஷோர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக, போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரது வாயில் துணியை வைத்து இறுக்கி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் 'போதை மறுவாழ்வு' மையத்தில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 2

இதையடுத்து கிஷோர் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில், கிஷோரை ஒரு பேண்டால் கட்டப்பட்டு பின்னர் அவர் சத்தமிடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியை வைத்து இறுக்கியுள்ளனர்.இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக கிஷோர் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைனைத் தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார், மையத்தின் உரிமையாளர், பணியாளர்கள், காப்பாளர் மற்றும் உளவியல் நிபுணர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com