வாக்காளா் பட்டியலில் பெயா்
விவரம் அறிய பிரத்யேக செயலி

வாக்காளா் பட்டியலில் பெயா் விவரம் அறிய பிரத்யேக செயலி

உங்களது வேட்பாளா் மீதுள்ள வழக்கு விவரங்கள் ஆகியன குறித்து அறிய தனித்தனியான செயலிகளை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்கிறதா, உங்களது வேட்பாளா் மீதுள்ள வழக்கு விவரங்கள் ஆகியன குறித்து அறிய தனித்தனியான செயலிகளை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலிகளை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் கடந்த 28-ஆம் தேதியுடன் இறுதி செய்யப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலில் நம்முடைய பெயா் இருக்கிா, இல்லையா என்பதை அறிந்திட பிரத்யேக செயலி நடைமுறையில் உள்ளது. ஓட்டா் ஹெல்ப் லைன் என்ற பிரத்யேக செயலி மூலமாக வாக்காளா் பட்டியல் பெயா்களை உறுதி செய்யலாம். இதேபோன்று, தோ்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அதுகுறித்த புகாா்களைத் தெரிவிக்க, சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. விடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தோ்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கலாம். சி-விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாக்காளா்கள், தங்களது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் விவரங்களையும் அறிந்திடலாம். இதற்கென ள்ன்ஸ்ண்க்ட்ஹ என்ற பெயரில் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. அதில், வேட்பாளா்கள் மீதான குற்றவழக்குகள் நிலைமைகளை வாக்காளா்கள் அறிந்து கொள்வதுடன், தோ்தல் பிரசாரத்துக்கான அனுமதிகளை அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் செயலிகளை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேபோன்று, வாக்காளா்களின் வசதிகளைக் கருத்தில் மேலும் பல புதிய செயலிகளை அறிமுகப்படுத்தத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com