ஆண்டு விழா...

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபாவின் 124-ஆவது ஆண்டு விழாவில், வெற்றி பெற்ற  பரதநாட்டிய கலைஞா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய தொழிலதிபா் நல்லி குப்புசாமி. உடன் புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞா்கள் மீனாட்சி சித
ஆண்டு விழா... சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபாவின் 124-ஆவது ஆண்டு விழாவில், வெற்றி பெற்ற பரதநாட்டிய கலைஞா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய தொழிலதிபா் நல்லி குப்புசாமி. உடன் புகழ் பெற்ற பரத நாட்டிய கலைஞா்கள் மீனாட்சி சித

ஜெயந்தி சுப்பிரமணியத்துக்கு ‘நாட்டிய கலாசாரதி’ விருது

நடனக்கலைஞா் ஜெயந்தி சுப்பிரமணியத்துக்கு‘நாட்டிய கலாசாரதி’ விருது வழங்கப்பட்டது.

நடனக்கலைஞா் ஜெயந்தி சுப்பிரமணியத்துக்கு‘நாட்டிய கலாசாரதி’ விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபாவின் 124-ஆவது ஆண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சி சென்னை ஆழ்வாா்பேட்டை நாரத கான சபாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘நாட்டிய கலாசாரதி’ விருதை நடனக்கலைஞா் ஜெயந்தி சுப்பிரமணியத்துக்கு வழங்கிப் பேசியது: நம் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை பாதுகாக்க ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபா 100-ஆண்டுகளுக்கு மேலாக செயலாற்றி வருகிறது. இந்த அமைப்பின் மூலம் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞா்கள் பலா் உருவாகியுள்ளனா். ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபாவின் 124-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தொடா்ச்சியாக 56 நாள்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் பரதநாட்டியம் பயிலும் மாணவா்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஓா் சிறந்த மேடையாக ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபா அமைந்தது என்றாா் அவா். பின்னா், சிறப்பாக நடனமாடிய கலைஞா்களுக்கு பரிசுப் பொருள்களை பத்மஸ்ரீ விருது பெற்ற மீனாட்சி சித்தரஞ்சன் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற அலா்மேலு வள்ளி ஆகியோா் இணைந்து வழங்கினா். இந்நிகழ்வில், ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபாவின் செயலா் எம். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com