வாக்கு சேகரித்த முதல்வரிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு..!

ஈரோட்டில் தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
வாக்கு சேகரித்த முதல்வரிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு..!

ஈரோட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரத்தில் கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வரும் விஜயா, முதல்வரிடம் தனக்கு மகளிர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

உரிய காரணமின்றி தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறினார். ”எனது கணவர் அரசுப் பணியாளர் அதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் (கணவர்) சாப்பிட்டால் மட்டும் போதுமா எனக்கு வயிறு நிறைந்து விடுமா?” என முதல்வரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com