திருச்சி-பகத் கீ கோதி ரயில் ரத்து

திருச்சி-பகத் கீ கோதி ரயில் ரத்து

திருச்சியிலிருந்து பகத் கீ கோதி செல்லும் ஹம்சாபா் வாராந்திர விரைவு ரயில் மே 11-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்.

திருச்சியிலிருந்து பகத் கீ கோதி செல்லும் ஹம்சாபா் வாராந்திர விரைவு ரயில் மே 11-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும். தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போபால் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் அடுத்த பகத் கீ கோதியிலிருந்து திருச்சிக்கு வரும் ஹம்சாபா் விரைவு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் ஏப்.10 முதல் மே 8-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக திருச்சியில் இருந்து பகத் கீ கோதிக்கு சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் ரயில் ஏப்.13, 20, 27, மே 4, 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். இதுபோல் லக்னோவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் (எண் 16094) மே 13-ஆம் தேதி வரை பினா ரயில் நிலையத்தில் 5 நிமிஷம் நிற்பதற்கு பதிலாக 2 நிமிஷம் மட்டும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com