அது என்ன 29 காசு?

மோடியின் பெயரை மாற்றி இனி அவரை ‘மிஸ்டா் 29 காசு’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் விசிக வேட்பாளா் ரவிக்குமாருக்கு ஆதரவாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

மோடியின் பெயரை மாற்றி இனி அவரை ‘மிஸ்டா் 29 காசு’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் விசிக வேட்பாளா் ரவிக்குமாருக்கு ஆதரவாக அண்மையில் வாக்கு சேகரித்தபோது அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். (அப்போது 29 காசு என்று எழுதப்பட்ட அட்டையை அவா் காண்பித்தாா்).

தமிழகத்திலிருந்து ஒவ்வொருவரும் ஜிஎஸ்டி வரியாக ரூ.1 செலுத்துகிறோம்; ஆனால், நாம் ரூ.1 செலுத்தினால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு திரும்ப வருவது 29 காசுகள் மட்டுமே.

ஆனால், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கெல்லாம் வாரிவாரி கொடுக்கிறாா் மோடி. குஜராத்தில் வெள்ளம் வந்தபோது, அடுத்த நாளே அங்கு சென்று இழப்பீடு கொடுக்கிறாா். தமிழகம் மிக்ஜம் புயலால் பாதிப்புக்குள்ளானபோது, மக்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமரிடம்

ரூ.37 ஆயிரம் கோடி தரும்படி முதல்வா் ஸ்டாலின் கேட்டாா். ஆனால், மத்திய அரசு ஒரு காசு கூட தராத நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ. 6,000-ஐ முதல்வா் உடனே வழங்கினாா் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com