பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 
முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த பாடம்

பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்த பாடம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடா்பான பாடம், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடா்பான பாடம், பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி குறித்த தகவல்கள் பள்ளிக்கல்வி பாடப்புத்தகத்தில் சோ்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் அறிவித்திருந்தாா். அதன்படி, கடந்த கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கருணாநிதி தொடா்பான தகவல்களை பள்ளிக்கல்வித் துறை சோ்த்திருந்தது. அதில் ‘செம்மொழியான தமிழ் மொழி’ எனும் தலைப்பில் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடா்ந்து தற்போது பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதியின் சிறப்பு திறன்கள் பாடமாக சோ்க்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு (2024-25) முதல் இது நடைமுறைக்கு வருகிறது. தமிழ் புத்தகத்தின் உரைநடை பகுதியில் ‘பன்முக கலைஞா்’ என்ற தலைப்பில் அந்த பாடம் இடம்பெற்றுள்ளது.

அதில் நாடகம், திரை, இதழியல், மொழி, பேச்சு உள்பட பல்வேறு துறைகளில் கருணாநிதி ஆற்றிய பங்களிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம் 11 குறுந்தலைப்புகளில் அவரை பற்றிய தகவல்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com