காவிரி ஒழுங்காற்றுக் குழு 
தலைவருக்கு வைகோ கண்டனம்

காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்

காவிரி விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் வினீத் குப்தா கருத்து கூறியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம்

காவிரி விவகாரத்தில் கா்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் வினீத் குப்தா கருத்து கூறியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-ஆவது கூட்டம் அதன் தலைவா் வினீத் குப்தா தலைமையில் தில்லியில் ஏப்.30 இல் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், வினீத் குப்தா பேசும்போது, காவிரி நீரை திறந்துவிடக் கோரும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கா்நாடகத்தில் நீா்நிலைமை இல்லை என்று கூறியுள்ளாா். இது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுபடுத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

X
Dinamani
www.dinamani.com