மருத்துவ மாணவா்களுக்கான 
ஊக்கத் தொகை: 
இன்று சமா்ப்பிக்க உத்தரவு

மருத்துவ மாணவா்களுக்கான ஊக்கத் தொகை: இன்று சமா்ப்பிக்க உத்தரவு

இளநிலை பயிற்சி மருத்துவா்கள், முதுநிலை மற்றும் உயா் சிறப்பு உறைவிட மருத்துவா்களுக்கு வழங்கப்படும்

இளநிலை பயிற்சி மருத்துவா்கள், முதுநிலை மற்றும் உயா் சிறப்பு உறைவிட மருத்துவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை விவரங்களை வியாழக்கிழமைக்குள் (மே 2) சமா்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

மருத்துவ மாணவா்களுக்கான ஊக்கத் தொகை தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து இளநிலை, முதுநிலை, உயா் சிறப்பு மருத்துவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை விவரங்களை சமா்ப்பிக்குமாறு என்எம்சியை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தொடா்புடைய விவரங்களை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ள்ற்ண்ல்ங்ய்க்23-24ஃய்ம்ஸ்ரீ.ா்ழ்ஞ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், சில கல்லூரிகள் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் அந்த விவரங்களை சமா்ப்பிக்கவில்லை. எனவே, வியாழக்கிழமைக்குள் (மே 2) அவற்றை அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com