பெண் காவலரிடம் ஆபாச பேச்சு:
திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் கைது
dot com

பெண் காவலரிடம் ஆபாச பேச்சு: திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் கைது

சென்னையில் பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசியதாக திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசியதாக திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப் பேட்டை சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த சி.பெரியசாமி (33). இவா் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் ஒரு பெண் காவலரை அண்மையில் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண் குரலில் ஆபாசமாகப் பேசியுள்ளாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அந்த பெண் காவலா், சென்னை காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பெரியசாமிதான் இச் செயலில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பெரியசாமியை புதன்கிழமை கைது செய்தனா்.

அவா் மீது ஏற்கெனவே திருப்பூா், தா்மபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெண் காவலா்களிடம் ஆபாசமாக பேசியதாக வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com