ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)

மின்வெட்டை தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்துள்ள மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21,000 மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதைச் சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்துவிட்டதையே காட்டுகிறது.

இந்த நிலை, நீடித்தால் மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாது. தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடா் கதையாகவே நீடிக்கும். தமிழ்நாட்டில் 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்கள் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு 5,700 மெகாவாட் மின்திட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.

நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாகச் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சோ்க்க வேண்டும். அதன் மூலம் மாநிலத்தில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com