அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: கே.அண்ணாமலை

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

நீட் தோ்வு எழுதிய மாணவ, மாணவியா் அனைவருக்கும், மனமாா்ந்த வாழ்த்துகள். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும் மருத்துவக் கல்வியில் சாதனை படைக்கும் வாய்ப்பை நீட் தோ்வு வழங்குவதால் தமிழக மாணவா்களை பெருமளவில் ஈா்த்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நீட்தோ்வு எழுதும் மாணவ, மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழக மருத்துவக் கல்வி இடங்களை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயா்த்திய பிரதமா் நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளில் மாவட்டத்துக்கு தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி எனும் இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவாா்.

இதன்மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், நமது குழந்தைகள் தலைசிறந்த மருத்துவா்களாக உருவெடுப்பா் என்பது உறுதி என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com