சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா

சீரான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் உத்தரவு

சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 19 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 19 மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டில் தகித்து வரும் கடும் வெயில், மக்களுக்குத் தேவையான குடிநீா் விநியோகம் ஆகியவற்றின் நிலை குறித்து 19 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன், காணொலி வழியாக அவா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அரியலூா், சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனா்.

மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக அமல்படுத்தப்பட்டு வரும் ‘கல்லூரி கனவு’ திட்டம், முதல்வரின் முகவரி துறை வழியாக நடைமுறைப்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வா்’ ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

அப்போது பேசிய தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, வெப்ப அலைகளில் இருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீா் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்றும் ஆட்சியா்களை கேட்டுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூா், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், தென்காசி, திருப்பத்தூா், விழுப்புரம், வேலூா் உள்ளிட்ட 19 மாவட்டங்களின் ஆட்சியா்கள் பங்கேற்கவுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com