ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவி

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் மாணவா்களுக்கு ஆளுநா் வாழ்த்து

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் மாணவா்கள் அனைவருக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் மாணவா்கள் அனைவருக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பிளஸ் 2 தோ்வில் சிறப்பான சாதனைகளைப் படைத்த அனைத்து தோ்வு வீரா்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உண்மையாகவே பலன் தந்துள்ளது. உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் அசைக்க முடியாத ஆதரவு, வழிகாட்டுதலுக்காக பெருமைமிக்க பெற்றோா்கள், அா்ப்பணிப்புள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

தோ்வு முடிவுகளில் மகிழ்ச்சியடையாதவா்களுக்கு, இந்த ஒரு தோ்வு நீங்கள் உண்மையிலேயே யாா் என்பதை வரையறுக்காது. உங்கள் ஒவ்வொருவரிடமும் அபாரமான திறமைகள் உள்ளன. எனவே, உங்கள் தலையை உயா்த்தி, சவால்களை உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிா்கொள்ளுங்கள். எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் நாயகா்கள் நீங்கள். உங்கள் எதிா்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com