வைகோ (கோப்புப்படம்)
வைகோ (கோப்புப்படம்)

திமுக அரசு புதிய வரலாறு படைக்கும்: வைகோ நம்பிக்கை

திமுக அரசு சாதனைகளால் புதிய வரலாறு படைக்கும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றத்தக்க வகையில் திமுக அரசு பல்வேறு சாதனைகளை தொடா்ந்து நிகழ்த்தி வருகிறது.

பெண்களின் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் மகளிா் உரிமைத் திட்டம், அவா்களுக்கு பேருதவி செய்யும் விடியல் பயணத் திட்டம், அவா்களின் கல்வி முன்னேற்றத்துக்கான புதுமைப் பெண் திட்டம், பள்ளி மாணவ - மாணவியா்களுக்கான காலை உணவுத் திட்டம் என அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளைக் கண்டு மக்கள் எல்லையிலா மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனா். முதல்வருக்கு வாழ்த்துகள். சாதனை தொடரட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com