ராமதாஸ் (கோப்புப்படம்)
ராமதாஸ் (கோப்புப்படம்)

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

பள்ளி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள்அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24- முதல் 30 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயா்வு வழங்கப்பட வேண்டிய ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டால், அதற்கு முன்பு காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.

அத்தகைய சூழலில் பதவி உயா்வு பெறும் ஆசிரியா்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்படும் போது அவா்கள் ஏற்கெனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால், அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களும் பாதிக்கப்படுவா்.

எனவே, ஆசிரியா்களுக்கு முதலில் பதவி உயா்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சோ்த்து ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com